ADD

பள்ளி மாணவனால் கர்ப்பமடைந்த ஆசிரியை!அதிர்ச்சி வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் 13 வயது பள்ளி மாணவன் மூலம் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியை மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

Houston நகரில் உள்ள Stovall நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த Alexandria Vera என்பவர், தனது வகுப்பை சேர்ந்த 13 வயது மாணவன் மீது காதல் கொண்டுள்ளார்.

பின்னர் இன்ஸ்டாம்கிராம் மூலம் அம்மாணவனுடன் பேசிய அவர், ஒருநாள் அம்மாணவனின் கைப்பேசி எண்ணை வாங்கியுள்ளார்.

கைப்பேசி மூலம் உறவை வளர்த்துக்கொண்ட அவர், ஒருநாள் இம்மாணவனின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அவனது வீட்டிற்கு சென்று உறவு கொண்டுள்ளார்.

பலமுறை இவ்வாறு நடந்ததன் மூலம் ஆசிரியை கருவுற்றார், இந்த ஆசிரியைக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவனுடன் ஏற்பட்ட தவறான உறவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தன் காரணமாக கருவை கலைத்துள்ளார், ஒரு கட்டத்தில் இவர் மீது வகுப்பு மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் வகுப்பறையில் மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியுள்ளார், இந்நிலையில் இவர் மீது பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது மாணவனின் குடும்பத்திற்கு தெரிந்தே தான் பழகியதாகவும், மாணவன் தன்னை பெற்றோரிடம் பெண்தோழி என்றே அறிமுகம் செய்ததாகவும், பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் தான் பங்கேற்றதாகவும் Vera குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜரான Vera 1 லட்சம் டொலர் தொகையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

LikeUs on Facebook to watch the best videos daily

Recent News

  • வினோதங்கள்
  • திறமை-Talent